×

விவசாயியை தாக்கிய லாரி டிரைவருக்கு வலை

சாத்தான்குளம், ஜன.29: சாத்தான்குளம் அருகேயுள்ள கண்டுகொண்டான்மாணிக்கம் கிராமத்தைச் சேர்ந்த சுடலைமுத்து மகன் கோபாலகிருஷ்ணன்(39). சடையன்கிணறைச் சேர்ந்த துரை மகன் கருப்பசாமி(30), லாரி டிரைவர். இவர்கள் இருவருக்கும் நிலப்பிரச்னை காரணமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது.  நேற்று சாத்தான்குளத்தில் உள்ள புரோட்டா கடையில் இருவரும் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த கருப்பசாமி, கோபாலகிருஷ்ணனை தாக்கினார். காயமடைந்த அவர் சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் சாத்தான்குளம் எஸ்ஐ சத்யபாமா வழக்குப்பதிவு செய்து கருப்பசாமியை தேடி வருகிறார்.

Tags : truck driver ,
× RELATED தொழில் போட்டியில் லாரி டிரைவரை கடத்திய கிளீனர் உட்பட 4 பேர் கைது