×

ஸ்பிக்நகர் அருகே அத்திமரப்பட்டி ரோட்டில் தாழ்வாக செல்லும் மின் கம்பிகளால் விபத்து அபாயம்


ஸ்பிக்நகர், ஜன.29: ஸ்பிக்நகரை அடுத்துள்ள அத்தி மரப்பட்டி ரோட்டில் உள்ள தாழ்வாக செல்லும் மின்கம்பங்களால் விபத்து அபாயம் உள்ளதால் புதிய மின்கம்பங்களை நட்டி மின்கம்பிகளை உயர்த்தி கட்ட வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தூத்துக்குடி ஸ்பிக்நகரை அடுத்துள்ள அத்திமரப்பட்டி சாலை பகுதியில் சுமார் 20 ஆண்டு களுக்கு முன்பு மின்கம்பங்கள் நடப்பட்டது. அதன்பிறகு பலமுறை சாலை போடப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் சாலை சுமார் 4 முதல் 5 அடி வரை உயர்ந்துள்ளது. ஆனால் அப்பகுதியில் உள்ள 10க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் 20 ஆண்டு களுக்கு முன் போடப்பட்டது என்பதால் அதன் வழியாக செல்லும் மின்கம்பிகள் மிக தாழ்வாக செல்கிறது.
இதனால் சுற்றுவட்டார பகுதியிலிருந்து விவசாய பொருட்களை ஏற்றிச் செல்லும் லாரி உள்ளிட்ட வாகனங்கள் செல்லும்போது மின்கம்பிகளை கம்புகளை கொண்டு உயர்த்தி பிடிக்க வேண்டிய நிலை உள்ளது. இதனை கவனிக்காமல் செல்லும் வாகனங்கள் மின்கம்பிகளை இழுத்து செல்லும் நிலையும் ஏற்படுகிறது. தாழ்வாக செல்லும் மின்கம்பிகளால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. என்வே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தாழ்வாக காணப்படும் மின்கம்பங்களை மாற்றி புதிய மின்கம்பங்களை நடுவதுடன், மின்கம்பிகளையும் உயர்த்தி அமைக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.


Tags : accident ,Spiknagar ,Attimarapatti Road ,
× RELATED அத்திமரப்பட்டி -பொட்டல்காடு இடையே...