×

திசையன்விளையில் கோலாகலம் சுடலை ஆண்டவர் கோயில் மகா கும்பாபிஷேகம்

திசையன்விளை, ஜன. 29:  திசையன்விளை வடக்குத்தெரு சுடலை ஆண்டவர் கோயிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நேற்று கோலாகலமாக நடந்தது. இதில் திரளான பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.  திசையன்விளை வடக்குத்தெரு சுடலை ஆண்டவர் கோயில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா, கடந்த 25ம் தேதி துவங்கி தொடர்ந்து 4 நாட்கள் நடந்தது. ஆனந்த விநாயகர், சுடலை ஆண்டவர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கும் மகா கும்பாபிஷேகம் நடந்தது. தினசரி பல்வேறு சிறப்பு யாக பூஜைகள் நடந்தது. நேற்று காலை மங்கள இசை, திருமுறைபாராயணம், ஆறாம் காலயாக பூஜைகள், பிம்பசுத்தி, பிரம்பரக்ஷா பந்தனம், திரவ்யாஹூதி நடந்தது.  ஸ்பரிசாஹூதியும்,  பூர்ணாஹூதி தீபாராதனை, யாத்ராதானம், கடம்புறம்பாடு நடந்தது. தொடர்ந்து பக்தர்கள் பக்தி கோஷத்துடன் கோபுர கும்பாபிஷேகமும், அதனைத் தொடர்ந்து மூலஸ்தான சுவாமி மற்றும் பரிபார மூர்த்திகளுக்கு மகாகும்பாபிஷேகமும் நடந்தது. கும்பாபிஷேக நேர்முக வர்ணனையை சாத்தன்விளை ஆசிரியர் தர்மலிங்கம் செய்தார். 25ம் தேதி காலை முதல் 28ம் தேதி மதியம் வரை தொடர்ந்து அன்னதானம் நடந்தது. ஏற்பாடுகளை வடக்குத்தெரு ஸ்ரீசுடலை ஆண்டவர்  ஆனந்த விநாயகர்,  மன்னராஜா கோயில்களின் நிர்வாகி சேம்பர் செல்வராஜ் மற்றும் வரிதாரர்கள்

Tags : Kolagalam Sudalai ,Maha Kumbabhishekam ,Thissayanvilai ,
× RELATED செஞ்சேரி விநாயகர், மகாகாளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்