×

குடியரசு தின விழா கொண்டாட்டம்

ராசிபுரம், ஜன.29: ராசிபுரம் பாவை கல்விகுழுமத்தை சேர்ந்த பொறியியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரி, கலை அறிவியல் கல்லூரி, ஆசிரியர் பயிற்சி நிறுவனம், பார்மசி கல்லூரி, நர்சிங் கல்லூரி, அலைடு ஹெல்த் சயின்ஸ் மற்றும் ஐஏஎஸ் ஆகாடமி சார்பில், குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. பாவை கல்வி நிறுவனங்களின் தலைவர் ஆடிட்டர் நடராஜன் தலைமை தாங்கி, தேசிய கொடியை ஏற்றி வைத்து பேசினார். விழாவில் இயக்குனர்கள் (சேர்க்கை) செந்தில், (நிர்வாகம்) ராமசாமி மற்றும் அனைத்து கல்லூரிகளின் முதல்வர்கள், முதன்மையர்கள், பேராசிரியர்கள், அலுவலர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.     ...

தைப்பூசத்தை முன்னிட்டு பக்தர்களுக்கு அன்னதானம் திருச்செங்கோடு ராஜாகவுண்டம்பாளையம் செங்குந்தர் பாவடி பஞ்சாயத்து சார்பில் சார்பில், 32ம்  ஆண்டு தைப்பூச திருவிழா நடந்தது. பக்தர்களின் காவடி ஆட்டம் நடைபெற்றது. மதியம் 1 மணிக்கு மாயார் பூஜை என்னும் மகேஸ்வர  பூஜை  நடைபெற்றது. தொடர்ந்து சுமார் 5 ஆயிரம் பக்தர்களுக்கு அன்னதானம்  வழங்கப்பட்டது. சிறப்பு விருந்தினராக தொழிலதிபர் ஜான்சன்ஸ் நடராஜன், பொன். சரஸ்வதி எம்எல்ஏ,  தியாகராஜன் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர். விவசாயிகளுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி நாமகிரிப்பேட்டை ஒன்றியம் தொப்பம்பட்டி கிராமத்தில், விவசாயிகளுக்கு  திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட்டது. வேளாண் உதவி இயக்குனர் ராஜேஸ்வரி, வேளாண் அலுவலர் மோகன் ஆகியோர் பயிற்சி அளித்தனர். இதில் வேளாண் அலுவலர் சக்திவேல், கோவை தனியார் வேளாண் கல்லூரி மாணவர்கள்  பிரபாவன், தரணிஷ், சேது. அரவிந்த் மற்றும் வட்டார தொழில்நுட்ப மேலாளர்  சுரேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

சாலை பணியை கலெக்டர் ஆய்வு
சேந்தமங்கலம் ஒன்றியம் சின்னபள்ளம்பாறை கிராமத்தில், பிரதம மந்திரி சாலை மேம்பாடு திட்டத்தில் ₹21.07 லட்சம் மதிப்பில், சாலை மேம்பாட்டு பணிகள் நடந்து வருகிறது. இப்பணிகளை கலெக்டர் மெகராஜ், நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது, ஜல்லி, சிமெண்ட் மற்றும் மூலப் பொருட்கள் தரமாக உள்ளதா என ஆய்வு செய்தார். கொல்லிமலை அடிவாரத்தில் சாலைப்பணிகள் மேற்கொள்வதால், மழைக்காலத்தில் சாலை சேதமடையாத அளவிற்கு தரமாக போட வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார். மேலும், குறித்த காலத்திற்குள் சாலை பணிகளை முடிக்க வேண்டுமென உத்தரவிட்டார். இந்த ஆய்வின் போது, பிடிஓக்கள் புஷ்பராஜன், ஜெயகுமரன், ஒன்றிய பொறியாளர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

₹8 லட்சத்திற்கு எள், பருத்தி விற்பனை
திருச்செங்கோடு வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை  சங்கத்தில் நேற்று எள், பருத்தி ஏலம் நடந்தது. சேலம், நாமக்கல், ஈரோடு,  திருப்பூர், கோவை, கள்ளக்குறிச்சியை சேர்ந்த விவசாயிகள் 100 மூட்டை எள்  மற்றும் 150 மூட்டை பருத்தியை  விற்பனைக்கு கொண்டு வந்தனர். ஏலத்தில்  சிகப்பு எள் கிலோ ₹80.60  முதல் ₹94.60 வரையும், வெள்ளை எள் கிலோ ₹79.20  முதல் ₹101 வரையும், கருப்பு எள் கிலோ ₹78.10 முதல் ₹97.90 வரைமாக  விற்பனையானது.  தொடர்ந்து பருத்தி ஏலம் நடந்தது. இதில் பிடி ரகம் பருத்தி  குவிண்டால் ₹5,649 முதல் ₹6,199 வரை விற்பனையானது. ஒட்டுமொத்தமாக எள் ₹5  லட்சத்துக்கும், பருத்தி ₹3 லட்சத்துக்குமாக மொத்தம் ₹8 லட்சத்துக்கு  வர்த்தகம் நடந்தது என கூட்டுறவு சங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : Republic Day Celebration ,
× RELATED மாநில இறகுப்பந்து போட்டியில் முதலிடம் தர்மபுரி மாணவருக்கு பாராட்டு