*முன்னேற்பாடுகளை கலெக்டர் ஆய்வு
சித்தூர் : சித்தூர் மாவட்டத்திற்கு முதல்வர் சந்திரபாபு நாயுடு இன்று வருகைதர உள்ளார். அதற்கான ஏற்பாடுகளை கலெக்டர் ஆய்வு செய்தார். சித்தூர் மாவட்டத்திற்கு ஒரு நாள் பயணமாக முதலமைச்சர் நாரா சந்திரபாபு நாயுடு இன்று வருகை தருகிறார்.
நகரி நகரத்திற்கு வருகை தரும் முதல்வரை வரவேற்க அனைத்து ஏற்பாடுகளும் தீவிரமாக நடந்து வருகிறது. இப்பணிகளை நேற்று கலெக்டர் சுமித் குமார் ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார்.
பின்னர் கலெக்டர் சுமித் குமார் கூறியதாவது: முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு காலை 11.20 மணிக்கு நகரியில் ஜூனியர் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேடை அடைகிறார். பின்னர் காலை 11.30 மணிக்கு ஷாப் விளையாட்டு மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள பொது மேடையை அடைந்து பொதுக்கூட்டத்தில் பங்கேற்பார்.
பின்னர், மதியம் 1.50 மணிக்கு நகரி நகரில் உள்ள ஆண்கள் மற்றும் பெண்களுக்கான மெட்ரிக்கு முந்தைய மற்றும் மெட்ரிக்குப் பிந்தைய சமூக நல விடுதியை ஆய்வு செய்வார். பிற்பகல் 2.15 மணிக்கு நகரி மருத்துவமனைக்கு சென்று மக்களுடன் கலந்துரையாடுவார்.
பிற்பகல் 2.40 மணிக்கு ஜூனியர் கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அரசியல் கூட்டத்தில் பங்கேற்று, பிற்பகல் 3.55 மணிக்கு உண்டவல்லிக்குத் திரும்புவார்.
இவ்வாறு கலெக்டர் கூறினார். முன்னதாக கலெக்டர் அதிகாரிகளுடன் ஹெலிபேட், விடுதிகள், பள்ளிகள் விளையாட்டு மைதானம் உள்ளிட்ட பகுதிகளை ஆய்வு செய்து பாதுகாப்பு பணிகள் குறித்து அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
