கல்லூரி மாணவியை கடத்திய வியாபாரி

கிருஷ்ணகிரி, ஜன.29:  கிருஷ்ணகிரி  அருகே குந்தாரப்பள்ளியைச் சேர்ந்தவர் கண்ணதாசன்(47). பொம்மை  தயாரித்து விற்பனை செய்து வரும் இவரது மனைவி அஞ்சலி. குடும்பத் தகராறு காரணமாக, கடந்த சில ஆண்டுக்கு முன்பு, அஞ்சலி தற்கொலை  செய்து கொண்டார். இதையடுத்து, கண்ணதாசன் தனது மகன் மற்றும் மகளுடன் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில், அவரது வீட்டின் அருகே வசிக்கும் 17 வயதான கல்லூரி மாணவிக்கும், கண்ணதாசனுக்கும் இடையே பழக்கம்  ஏற்பட்டுள்ளது. கடந்த 6ம் தேதி மாலை முதல், கல்லூரி மாணவி  மற்றும் கண்ணதாசன், அவரது குழந்தைகளை காணவில்லை. இதுகுறித்து மாணவியின் தாய், கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தார். அதில், தனது மகளை திருமணம்  செய்யும் நோக்கில் கண்ணதாசன் கடத்திச் சென்றிருக்கலாம் எனவும், அவரை மீட்டு தருமாறும் தெரிவித்துள்ளார். இதன்பேரில், எஸ்.ஐ. நிர்மலா வழக்குப்பதிந்து, மாயமானவர்களை தேடி வருகிறார்.

Related Stories:

More