×

மாரண்டஅள்ளி அருகே சீறிப்பாய்ந்த 100 காளைகள்

பாலக்கோடு, ஜன. 29: மாரண்ட அள்ளி அருகே, பன்னிஅள்ளி கிராமத்தில் 100 க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்ற எருதாட்ட விழா நடந்தது.
மாரண்டஅள்ளி அருகே பன்னிஅள்ளி கிராமத்தில், சுமார் 300க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில், கொரோனா தொற்றால் கடந்த ஆண்டு எருதாட்ட விழா நடக்கவில்லை. இந்நிலையில், நடப்பாண்டு நேற்று எருதாட்ட விழா நடந்தது. முன்னதாக ஊர் சார்பில் பூஜை செய்து, காளைகள் அவிழ்த்து விடப்பட்டது. சாமனூர், பஞ்சப்பள்ளி, எம். செட்டிஅள்ளி, அத்துமூட்லு, மாரண்டஅள்ளி, மல்லாபுரம் ராயக்கோட்டை, வெள்ளிச்சந்தை ஆகிய ஊர்களில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட காளைகள் கொண்டு வரப்பட்டு, அவிழ்த்து விடப்பட்டன.

சீறிப்பாய்ந்து சென்ற இந்த காளைகளை, மாடு பிடி வீரர்கள், உள்ளூர் இளைஞர்கள் பலர் போட்டி போட்டுக்கொண்டு அடக்க முயன்றனர். ந்நிகழ்ச்சியில், வீரர்களை தூக்கி வீசிய மாடுகளுக்கு, ஊர் சார்பில் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன. அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டது. விழாவின் போது அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க, மாரண்டஅள்ளி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags : bulls ,Marandahalli ,
× RELATED கல்லம்பட்டி முருகன் கோயில் திருவிழா மஞ்சுவிரட்டில் சீறிய காளைகள்