சாத்தூர், திருவில்லிபுத்தூரில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம்

சாத்தூர், ஜன. 29: சாத்தூர் வடக்கு ரத வீதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் பிரசாரம் மற்றும் நிதியளிப்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது. கட்சியின் நகர செயலாளர் விஜயகுமார் தலைமை வகித்தார். மாவட்டக்குழு உறுப்பினர்கள் சுப்பாராஜ், சுந்தரபாண்டியன், தெய்வானை முன்னிலை வகித்தனர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் முருகேசன், மாநிலக்குழு உறுப்பினர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் கலந்து கொண்டனர். கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் சிறப்புரையாற்றினார்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாத்தூர் நகரம் மற்றும் ஒன்றியம் சார்பில் கட்சி நிதியாக ரூ.5 லட்சத்தை ஜி.ராமகிருஷ்ணன் பெற்றுக் கொண்டார். நகர் சாத்தூர் நகர்குழு உறுப்பினர் சீனிவாசன் நன்றியுரை வழங்கினார்.

திருவில்லிபுத்தூர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவில்லிபுத்தூர் நகர் ஒன்றியம் வத்திராயிருப்பு ஒன்றியம் சார்பாக திருவில்லிபுத்தூரில் தேர்தல் நிதியளிப்பு கூட்டம் நடைபெற்றது. நகர செயலாளர் ஜெயக்குமார் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி ராமகிருஷ்ணன் பேசினார். நிகழ்ச்சியில் மூன்று கமிட்டிகள் சார்பாக வசூல் செய்யப்பட்ட தேர்தல் நிதி மூன்றரை லட்ச ரூபாய் வழங்கப்பட்டது. கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் மகாலட்சுமி, மாவட்ட செயலர் அர்ச்சுனன், மாவட்ட குழு உறுப்பினர் ஜோதிலட்சுமி, ராஜபாளையம் நகர செயலாளர் மாரியப்பன், திருவில்லிபுத்தூர் ஒன்றிய செயலாளர் சசிகுமார், வத்ராப் ஒன்றிய செயலர் ஜெயக்குமார் கலந்து கொண்டனர்.

Related Stories:

>