×

சிவகாசி, திருத்தங்கல்லில் துவக்கப்பள்ளிகள் திறப்பு

சிவகாசி, ஜன. 29: சிவகாசி, திருத்தங்கல்லில் புதிதாக ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி திறந்து வைத்தார்.
சிவகாசி அருகே திருத்தங்கல் ஸ்டாண்டர்டு காலனியிலும், சிவகாசி அருகே நாரணபுரம் ஊராட்சி லட்சுமியாபுரம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி பள்ளி கல்வித்துறை மூலம் தொடங்கப்பட்டது. இந்த புதிய ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளை அமைச்சர்
ராஜேந்திரபாலாஜி திறந்து வைத்தார்.

கிராம மக்களின் நலன் கருதி ஏழை எளிய மாணவர்களின் கல்வியின் தரத்தை உணர்ந்து புதிதாக இந்த ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகள் தொடங்கப்பட்டு உள்ளதாகவும், இதை கிராம மக்கள் சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அமைச்சர் பேசினார். நிகழ்ச்சியில் சந்திரபிரபா எம்எல்ஏ, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலதண்டாயுதபாணி, விருதுநகர் கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளர் ரவிச்சந்திரன், திருத்தங்
கல் நகர செயலாளர் பொன்சக்திவேல், சிவகாசி ஒன்றிய செயலாளர்கள் புதுப்பட்டி கருப்பசாமி, வேண்டுராயபுரம் சுப்பிரமணியன், தெய்வம், மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் சுபாஷினி, நாரணாபுரம் ஊராட்சிமன்ற தலைவர் தேவராஜன், தொழிலதிபர் லெனின் கிருஷ்ணமூர்த்தி, ஒன்றிய கவுன்சிலர் ஆழ்வார் ராமானுஜம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags : Opening ,Primary Schools ,Thiruthangal ,Sivakasi ,
× RELATED ஓடும் பஸ்சில் ஆசிரியையிடம் நகை திருட்டு