திருவில்லிபுத்தூரில் சிக்கிய பாம்புகள்

திருவில்லிபுத்தூர், ஜன. 29: திருவில்லிபுத்தூர் பைபாஸ் சாலையில் உள்ள தனியாருக்கு சொந்தமான மரக்கடை ஒன்றில் பாம்பு புகுந்ததாக தீயணைப்பு துறை அதிகாரி குருசாமி மற்றும் அந்தோணிசாமிக்கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று மரக்கடையில் பதுங்கியிருந்த சுமார் 9 அடி நீளமுள்ள நல்ல பாம்பை சுமார் ஒரு மணி நேரம் போராடி பிடித்தனர். இதே போல திருவில்லிபுத்தூர் மடவார்வளாகம் பகுதியில் வீட்டில் வளர்க்கும் முயல் கூண்டுக்குள் இருந்த சுமார் 7 அடியுள்ள மஞ்சள் சாரைப்பாம்பை தீயணைப்புத்துறையினர் பிடித்தனர். இரண்டு பாம்புகளையும் திருவில்லிபுத்தூர் அருகே உள்ள வனப்பகுதியில் அவர்கள் உயிருடன் விட்டனர்.

Related Stories:

>