×

கடும் பனியால் கருகும் சோளப்பயிர்கள் கவலையில் விவசாயிகள்

சின்னமனூர், ஜன.29: சின்னமனூர் சுற்றியுள்ள 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் மானாவாரியாகவும், கிணற்று பாசனத்தின் வாயிலாக வெள்ளைச் சோளம் விதைக்கப்பட்டுள்ளது. ஒரு ஏக்கருக்கு 25 ஆயிரம் வரை விவசாயிகள் செலவு செய்து வளர்த்துள்ளனர். அறுவடை நெருங்கும் நிலையில் விவசாயிகள் கவலையில் உள்ளனர். ஏற்கனவே மேற்கு மலை தொடர்ச்சி அடிவாரத்தில் தேனிமாவட்டம் இருப்பதால் ஜனவரி மாதத்தில் மழையும் பெய்து வருவதால், குளிர் கடுமையாக இருக்கிறது. இந்த குளிரால் வெள்ளைச் சோளம் தாக்குப் பிடிக்காமல் அறுவடை நெருங்கிய நேரத்தில் கருகி வருகிறது.

ஒரு சில நாட்களில் அறுவடை இருக்கும் நிலையில் சோளம் விலை போகாமல் உள்ளது. விவசாயிகள் உற்பத்தி செய்யப்பட்ட முதலும் கிடைக்காமல் கடும் பாதிப்பு ஏற்படும் என்று விவசாயிகள் கவலையில் உள்ளனர். அதன்படி சின்னமனூர் அருகே அய்யம்பட்டி, புலிகுத்தி, சிந்தலைச்சேரி மேலச்சிந்த லைச்சேரி, முத்துலாபுரம், கரிச்சிபட்டி, அப்பிபட்டி, எரசக்க நாயக்கனூர், காமாட்சிபுரம், அழகாபுரி, சீப்பாலக் கோட்டை உள்ளிட்ட பல பகுதிகளில் கடும் குளிரால் கருகி பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags :
× RELATED வறட்சியின் பிடியில் நீர் நிலைகள்...