விமானப்படை பணிக்கு விண்ணப்பிக்கலாம்

சிவகங்கை, ஜன.29: இந்திய விமானப்படை பணிக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் வரதராஜன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் இந்திய விமானப்படைக்கான ஆட் தேர்விற்கு குரூப் எக்ஸ் மற்றும் குரூப் ஒய் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மற்றும் டிப்ளமோ இன்ஜினியரிங் படித்த, 16.01.2001 முதல் 29.12.2004 வரையிலான தேதிகளுக்கிடைப்பட்ட நாட்களில் பிறந்த, திருமணம் ஆகாத தகுதியுள்ள இளைஞர்கள் www.airmanselection.cdac.in  மற்றும்   www.careeindianairforce.cdac.in என்ற இணையதள முகவரியில் 07.02.2021க்குள் விண்ணப்பிக்கலாம். கூடுதல் விபரங்களை மேற்கண்ட இணையதள முகவரியில் அறிந்து கொள்ளலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related Stories:

>