தேவகோட்டை நகராட்சி பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி

தேவகோட்டை, ஜன.29: தேவகோட்டையில் நகராட்சி அலுவலக பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. கொரோனா முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. தேவகோட்டை நகராட்சியில் பணியாற்றும் டெங்கு பணியாளர்களுக்கு வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் பிரபாவதி கொரோனா தடுப்பூசி போடுவதன் அவசியத்தை எடுத்துரைத்தார். அதன் பின்னர் நாற்பதுக்கும் மேற்பட்ட பணியாளர்கள் கொரோனா தடுப்பூசி போடுவதற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

Related Stories: