×

சோலைமலை முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா கோலாகலம்: தீர்த்தவாரியில் ஏராளமான பக்தர்கள் தரிசனம்

அலங்காநல்லூர், ஜன. 29: சோலை முருகன் கோயிலில், தைப்பூச திருவிழாவை முன்னிட்டு நேற்று நடந்த தீர்த்த வாரி நிகழ்ச்சியில் ஏராளமானோர் பக்தர்கள் தரிசனம் செய்தனர். மதுரை மாவட்டம், அழகர்கோவில் மலை மீது முருகப்பெருமாளின் ஆறாம்படை வீடான பழமுதிர்ச்சோலை சோலைமலை முருகன் கோயில் உள்ளது. இங்கு தைபூசத்தையொட்டி கடந்த 19ம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கி 10 நாட்கள் நடந்தது. அன்று முதல் அன்னம், பூதம், காமதேனு, பூச்சப்பரம், யானை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் முருகன், வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதைதொடர்ந்து நேற்று வள்ளி தெய்வானையுடன் முருகன் எழுந்தருளினார்.

இந்நிலையில் தைபூச விழாவான நேற்று கோயில் முன்பாக அமைக்கப்பட்டிருந்த மாதிரி தெப்பக்குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், வேலுக்கு சிறப்பு அர்ச்சனை, ஆராதனை நடத்தி பக்தர்கள் மீது தீர்த்தம் தெளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் ஏராளாமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். மேளதாளம் முழங்க தீவட்டி பரிவாரங்களுடன் பவனி வந்தார். அதனை தொடர்ந்து சிறப்பு அர்ச்சனை, ஆராதனைகள் நடைபெற்றன. விழாவுக்கான ஏற்பாடுகாளை கோயில் தக்கார் வெங்கடாசலம், நிர்வாக அதிகாரி அனிதா மற்றும் கோவில் கண்காணிப்பாளர்கள் திருக்கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை அப்பன்திருப்பதி போலீசார் செய்திருந்தனர்.

Tags : Thaipusam Festival ,Sholaimalai Murugan Temple ,devotees ,
× RELATED திருப்பதி கோயிலில் பக்தர்கள் கூட்டம்: 18 மணிநேரம் காத்திருந்து தரிசனம்