ஆடுகள் திருட்டு

திருமங்கலம், ஜன. 29: கள்ளிக்குடி அருகே உள்ள எஸ்பி நத்தத்தை சேர்ந்த காளிஸ்வரி (34), ஆடுகள் வளர்த்து வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு இரவில் வழக்கம்போல், ஆடுகளை கொட்டத்தில் அடைத்துவிட்டு தூங்கினார். மறுநாள் காலையில் பாத்தபோது கொட்டத்தில் இருந்த 2 ஆடுகளை காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், காளிஸ்வரி அளித்த புகாரின்பேரில், கள்ளிக்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>