×

குஜிலியம்பாறைக்கு வேண்டும் பாதாள சாக்கடை திட்டம் மார்க்சிஸ்ட் ஆர்ப்பாட்டம்

குஜிலியம்பாறை, ஜன. 29:  குஜிலியம்பாறையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட குழு உறுப்பினர் தம்பிமுத்து தலைமை வகிக்க, ஒன்றிய செயலாளர் ராஜரத்தினம், மாவட்ட குழு உறுப்பினர் முத்துச்சாமி முன்னிலை வகித்தனர்.  மாவட்ட செயற்குழு உறுப்பினர் செல்வராஜ் ஆர்ப்பாட்ட விளக்கவுரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் குஜிலியம்பாறையில் பாதாளா சாக்கடை திட்டத்தை அமல்படுத்த வேண்டும். மயானத்தில் மின்மயானம் அமைக்க வேண்டும். சமுதாய கூடத்தை திருமண மண்டபமாக தரம் உயர்த்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதில் ஒன்றிய குழு உறுப்பினர்கள் பாலசுப்பிரமணி, ஜெயபால், சரவணன், தங்கவேல், சண்முகவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கிளை செயலாளர் தங்கவேல் நன்றி கூறினார்.

Tags : demonstration ,
× RELATED ருச்செந்தூரில் விசிக ஆர்ப்பாட்டம்