×

தைப்பூசத்தை முன்னிட்டு சுப்பிரமணியசாமி கோயிலில் சிறப்பு வழிபாடு

பொள்ளாச்சி, ஜன. 29:  பொள்ளாச்சியில் தைப்பூசத்தை முன்னிட்டு கடைவீதி அருகே உள்ள சுப்பிரமணிய சாமி கோயிலில், நேற்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் சுப்பிரமணிய சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்து நின்று சுவாமி தரிசனம் செய்தனர். கொரோனா நோய் பரவல் அச்சம் காரணமாக, தைப்பூசத்தை முன்னிட்டு வழக்கமாக முக்கிய வீதிகள் வழியாக நடக்கும் திருவீதி உலா இந்தமுறை ரத்து செய்யப்பட்டது. மாறாக கோயில் வளாகத்திற்குள் கட்டுப்பாடுகளுடன் திருவீதி உலா நடைபெற்றது.

இதேபோல, ஜோதி நகர் விசாலாட்சி அம்மன் கோயில், உடனமர் ஜோதி லிங்கேஸ்வரர் கோயில், உள்ளிட்ட கோயில்களில் உள்ள சுப்பிரமணி சாமி சிலைக்கு சிறப்பு அலங்கார அபிஷேக பூஜைகள் நடைபெற்றது. இதில் சிறப்பு ராஜ அலங்காரத்தில் சுப்பிரமணிய சாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
வால்பாறை: வால்பாறை சுப்ரமணியசுவாமி கோவிலில் 16ம் ஆண்டு தைப்பூச திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி வால்பாறை நல்லகாத்து ஆற்றுபாலத்திலிருந்து மேளத்துடன் துவங்கிய ஊர்வலம் மெயின்ரோடு வழியாக அஞ்சலகம் வழியாக கோவிலை வந்தடைந்தது.
 ஊர்வலத்தில் பக்தர்கள் பால்குடம், தீர்த்தம், அலகு காவடி, கிரேன் காவடி எடுத்து வந்தனர். ஊர்வலத்தை முன்னிட்டு பேருந்துகள் மற்றும் வாகன போக்குவரத்து மாற்றியமைக்கப்பட்டிருந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags : Subramaniasamy Temple ,
× RELATED திருத்தணி சுப்பிரமணிய சாமி கோயில்...