×

கக்குச்சி,எப்பநாடு ஊராட்சியில் ரூ.1.72 கோடியில் வளர்ச்சி பணிகள்

ஊட்டி,ஜன.29: ஊட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கக்குச்சி மற்றும் எப்பநாடு ஊராட்சிகளில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தீனட்டியில் ஆர்சிஐடிஎஸ்., திட்டத்தின் கீழ் ரூ.22.95 லட்சம் மதிப்பில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கட்டிடடம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. மன்றகுறிச்சி பகுதியில் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.10.20 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட தடுப்பணையையும், தமிழ்நாடு ஊரக சாலைகள் மேம்பாடு திட்டத்தின் கீழ் ரூ.113.35 லட்சம் மதிப்பில் கக்குச்சி பஞ்சாயத்து அலுவலகம் முதல் ஒரலரணி பிரி வரை கான்கிரிட் சாலை அமைக்கப்பட்டுள்ளது.

மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தின் கீழ் கக்குச்சி நடுநிலைப்பள்ளியில் ரூ.5.08 லட்சம் மதிப்பில் சுற்றுச்சுவர் கட்டப்பட்டுள்ளது. ரூ.4.86 லட்சம் மதிப்பில் இண்டர்லாக் கற்கள் பதிக்கப்பட்டுள்ளன. எப்பநாடு ஊராட்சிக்குட்பட்ட கங்காநகர் ஆதிதிராவிடர் காலனி பகுதியில் மூலதன மானிய நிதி திட்டத்தின் கீழ் ரூ.15.95 லட்சம் மதிப்பில் கான்கிரீட் சாலை அமைக்கப்பட்டுள்ளது. மொத்தம் ரூ.1.72 கோடி மதிப்பில் பல்வேறு வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதனை நீலகிரி கலெக்டர் இன்னசென்ட் திவ்யா ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கெட்சி லீமா அமாலினி, செயற்பொறியாளர் சுஜாதா, ஊட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் ஸ்ரீதர், ஜெய்சங்கர் உட்பட பலர் உடன் இருந்தனர். டெல்லியில் விவசாயிகளை தாக்கிய விவகாரம்

Tags :
× RELATED பவானி அருகே ஸ்கூட்டர் மீது பஸ் மோதி கல்லூரி மாணவர் பலி