மும்பை: 3 நாள் தொடர் சரிவுக்கு பின் முதலீட்டாளர்கள் மீண்டும் பங்குகளை வாங்க ஆர்வம் காட்டியதால் 0.53% வரை உயர்ந்தன. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 398 புள்ளிகள் அதிகரித்து 82,307 புள்ளிகளானது. சந்தை தொடங்கியதும் 873 புள்ளிகள் அதிகரித்தபோதிலும் வர்த்தக நேர முடிவில் 398 புள்ளிகள் உயர்வுடன் முடிந்தது. பிஇஎல் பங்கு 3.7%, டாடா ஸ்டீல் பங்கு 2.7%, அதானி போர்ட்ஸ் பங்கு 2.5%, எஸ்பிஐ பங்கு 1.9% விலை உயர்ந்தன. தேசியப் பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 132 புள்ளிகள் அதிகரித்து 25,290 புள்ளியில் வர்த்தகம் நிறைவு பெற்றது. மும்பை சந்தையில் வர்த்தகமான 4,392 நிறுவன பங்குகளில் 2,962 நிறுவன பங்குகள் விலை உயர்ந்து வர்த்தகம் ஆனது. 1,268 நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்து வர்த்தகம், 162 நிறுவன பங்குகள் விலை மாற்றமின்றி முடிந்தன.
