×

பீளமேடு மேம்பால பணிகளை விரைந்து முடிக்கக்கோரி திமுக ஆர்ப்பாட்டம்

கோவை, ஜன. 29:  பீளமேடு மேம்பால பணிகளை விரைந்து முடிக்கக்கோரி கோவையில் திமுக ஆர்ப்பாட்டம் நடந்தது. கார்த்திக் எம்எல்ஏ உள்பட 550 பேர் கைது செய்யப்பட்டனர். கோவை சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பீளமேடு ஹோப் காலேஜ் - தண்ணீர் பந்தல் ரயில்வே உயர்மட்ட மேம்பாலம் கட்டுவதற்கு கடந்த 2010-ம் ஆண்டு திமுக ஆட்சியில், அன்றைய முதல்வர் கருணாநிதியால் ரூ.12 கோடி  ஒதுக்கி, அரசாணை வெளியிடப்பட்டது. ஆனால், 10 ஆண்டுகள் கடந்துவிட்ட பின்னரும் இதுவரை வெறும் 10 சதவீத பணிகள் மட்டுமே நடந்துள்ளது. இப்பணிகளை விரைந்து முடிக்கக்கோரி கோைவ மாநகர் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் பீளமேடு தண்ணீர்பந்தல் சாலையில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது.

மாவட்ட திமுக பொறுப்பாளரும், எம்எல்ஏ.வுமான கார்த்திக் தலைமை தாங்கினார். இதில், பங்கேற்றவர்கள் தமிழக அரசை கண்டித்து கோஷம் எழுப்பினர். ேபாலீஸ் தடையை மீறி இப்போராட்டம் நடந்ததால், கார்த்திக் எம்எல்ஏ உள்பட 550 பேர் கைது செய்யப்பட்டனர். ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர்கள் பி.நாச்சிமுத்து, மெட்டல் மணி, தொழிற்சங்க தலைவர் சிடிசி ரத்தினவேலு, பீளமேடு 1-வது பகுதிக்கழக பொறுப்பாளர் பாலசுப்பிரமணியம், வார்டு செயலாளர்கள் நடராஜன், கண்ணன், நிர்வாகிகள் வெ.நா.உதயகுமார், வக்கீல்கள் ஜி.டி.ராஜேந்திரன், ரவிச்சந்திரன், சரவணன், விஜயராகவன், இளைஞர் அணி கோட்டை அப்பாஸ், மு.இரா.செல்வராஜ், மா.செல்வராஜ், ஆ.கண்ணன், ஆனந்தன், சிங்கை பிரபாகரன், கமல் மனோகர், தேவசீலன், மதனகோபால், கல்பனா செந்தில், சி.டி.டி.ராஜராஜேஸ்வரி, திராவிடமணி, மீனாஜெயகுமார், சிங்கை சிவா, பசுபதி, மார்க்கெட் மனோகரன், பதுருதீன், மா.நாகராஜ், முருகவேல், அக்ரி பாலு, ஷாஜகான், சுந்தரலிங்கம், மேரி ராணி, அனந்தநாராயணன்,  அன்னம்மாள், ஜிடி.ரமேஷ் உள்பட பலர் பங்கேற்றனர்.

இதுபற்றி கார்த்திக் எம்எல்ஏ கூறுகையில், ‘’மேம்பாலம்  கட்டுமான பணி கிடப்பில் போடப்பட்டுள்ளதால், இப்பகுதி மக்கள்  பெரிதும்  பாதிக்கப்பட்டுள்ளனர். இதேபோல், கோவை மாவட்டம் முழுவதும் பல்வேறு  பகுதிகளில்  மேம்பால பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது. கட்டுமான பணிகளை  விரைந்து முடிக்க வேண்டும். மாறாக, இதேநிலை தொடர்ந்தால் மக்களை திரட்டி  தொடர் போராட்டம் நடத்தப்படும்’’ என்றார்.

Tags : demonstration ,DMK ,completion ,Peelamedu ,
× RELATED தாய்மார்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி