×

பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

பெருந்துறை, ஜன.29: பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரியில் கட்டணத்தை குறைக்க கோரி மாணவர்கள் கல்லூரி முன்பு நேற்று  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி முதலில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக கட்டுப்பாட்டில் இயங்கி வந்தது. பின்னர், அரசு மருத்துவ கல்லூரியாக மாற்றம் செய்யப்பட்டது. அரசு மருத்துவகல்லூரியாக மாற்றி அரசாணை வெளியிட்டு இரண்டு ஆண்டுகளாகியும் இன்னும் பழைய கட்டணமே வசூலிக்கப்படுகிறது மற்ற அரசு மருத்துவ கல்லூரிகளில் கட்டணம் ஆண்டுக்கு ரூ.13,610 ஆக அரசு நிர்ணயித்துள்ள நிலையில் பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரியில் ரூ.3 லட்சத்து 85 ஆயிரம் வசூலிக்கப்படுவதாக மாணவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.இதைக்கண்டித்து பெருந்துறை மருத்துவ கல்லூரி நுழைவு வாயிலில் மாணவர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags : Perundurai Government Medical College ,
× RELATED பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி...