×

சசிகலா விடுதலை மன்னார்குடியில் அமமுகவினர் கொண்டாட்டம்

மன்னார்குடி, ஜன. 28: பெங்களூரு பார்ப்பன அக்கிரஹார மத்திய சிறையில் நான்கு ஆண்டுகளாக இருந்து வந்த சசிகலா நேற்று காலை சட்ட ரீதியாக விடுதலை செய்யப் பட் டார். இந்நிலையில், சசிகலாவின் விடுதலையை வரவேற்கும் விதமாக மன்னார் குடியில் உள்ள மாவட்ட அமமுக அலுவலகத்தில் இருந்து மாவட்ட செயலா ளர் எஸ். காமராஜ் தலைமையில் ஏராளாமான வாகனங்களில் 500க்கும் மேற் பட்ட அமமுகவினர் ஊர்வலமாக சென்று தெற்கு வீதியில் உள்ள முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.பின்னர், பேருந்து நிலையம், பெரியார் சிலை, பந்தலடி, அரசு மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சசிகலாவின் விடுதலையை வரவேற்று அமமுக வினர் பட்டாசுகளை வெடித்து பொது மக்களுக்கு இனிப்புகளை வழங்கி கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து அமமுக மாவட்ட செயலாளர் எஸ். காமராஜ் கூறுகையில், சசிகலா சட்ட பூர்வமாக விடுதலை ஆகிவிட்டார். பெங்களூரில் தங்கி சிகிச் சை எடுத்து கொண்டு விரைவில் தமிழகம் திரும்ப உள்ளார். அவரது வரு கைக்காக தொண்டர்கள், நிர்வாகிகள், பொது மக்கள் ஆர்வத்துடன் காத்திரு க்கின்றனர். தமிழகம் வரும் அவருக்கு பிரமாண்டமான வரவேற்பு கொடுக்க காத்திருக்கிறோம். அவரின் வருகை தமிழக அரசியலில் மிகப்பெரியளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நகர செயலா ளர் வழக்கறிஞர் ஆனந்தராஜ் செய்திருந்தார்.நிகழ்ச்சியில், மாவட்ட துணை செயலாளர் வழக்கறிஞர் சரவணச்செல்வன், மாவட்ட ஜெ பேரவை இணை செயலாளர் வழக்கறிஞர் அமிர்தராஜ், மாவ ட்ட இணைச்செயலாளர் இளவரசி இளையராஜா, தொழிற்சங்க மாநில துணை தலைவர் ஆசைத்தம்பி, ஒன்றிய செயலாளர் ரங்கராஜ், மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணை செயலாளர் குணசேகரன், மேற்கு ஒன்றிய துணைச் செயலாளர்கள் அசேசம் எஸ்டிஎஸ் அரசு, வல்லாங்குடி காடு சோபா தமிழ்வாணன், நகர துணை செயலாளர் அண்ணாதுரை, நகர நிர்வாகிகள் பாரதி, செல்லத்துரை, அர்ஜுனன், பாலமுருகன், ஜெயக்குமார், மகேஸ்வரன் உள்ளிட்ட ஏரா ளாமான அமமுகவினர் கலந்து கொண்டனர்.   

Tags : Sasikala Liberation Celebration ,Mannargudi ,
× RELATED ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த...