×

பொதுமக்கள் எதிர்பார்ப்பு பிராந்திய மொழி உரிமைக்காக ஐநா சபையில் கையெழுத்திட்டு ஒரேநாடு ஒரே மொழி என அமித்ஷா பேசுவது வேடிக்கை

கும்பகோணம், ஜன.28: கும்பகோணத்தில் திமுக மாவட்ட மாணவரணி சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடந்தது. மாவட்ட மாணவரணி அமைப்பாளர் செந்தில்குமார் தலைமை வகித்தார். துணை அமைப்பாளர்கள் பிரகாஷ், ரமேஷ்குமார், விஜயகுமார், ரஞ்சன்துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தஞ்சை வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கல்யாணசுந்தரம், தலைமை பேச்சாளர் நெடுஞ்செழின் உட்பட பலர் பேசினர். தொடர்ந்து சிறப்பு அழைப்பாளராக கலந்துக்கொண்ட திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு பேசியதாவது: தாய் மொழிக்காக போராடிய தாளமுத்து நடராசன், கீழப்பழுர் சின்னசாமி, கோடம்பாக்கம் சிவலிங்கம், விருகம்பாக்கம் ரங்கநாதன், கீரனூர் முத்து, மாணவர் ராசேந்திரன், சத்தியமங்கலம் முத்து, ஆசிரியர் வீரப்பன், விராலிமலை சண்முகம், பீலமேடு தண்டபாணி, மயிலாடுதுறை சாரங்கபாணி ஆகியோர் நமது தாய் மொழி அழியக்கூடாது என்பதற்காக தன்னுயிர் நீத்து தியாகம் செய்தனர். நாட்டின் 3வது பெரிய கட்சியின் நாடாளுமன்ற தலைவர் என்ற முறையில் சொல்கிறேன். ஐ.நா சபையில் 193 நாடுகள் கையெழுத்திடுகின்றன.

அதில் மொழிகளுக்கு உரிமை கொடுக்க இந்தியாவும் கையெழுத்திடுகிறது. இங்கு ஒரே நாடு ஒரு மொழி என்று கூறிவிட்டு அங்கு கையெழுத்து போட எப்படி மனம் வந்தது. இதற்கு பதில் சொல்ல இன்னும் சில நாட்கள்தான் உள்ளது. இந்த நாட்டில் மொழி சுதந்திரம் மீறாமல் காப்பாற்றுவதற்கு நம் வீர தளபதி, தலைவர் கருணாநிதி வழியில் நின்று செயலாற்றி கொண்டிருக்கிறார். அவர் கொத்தளத்தில் கொடியேற்ற நாம் அரும்பாடு பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் எம்எல்ஏ அன்பழகன், நகர, ஒன்றிய செயலாளர்கள் தமிழழகன், கணேசன், தாமரைச்செல்வன், பாஸ்கர், அம்பிகாபதி, நாசர் உட்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் கவுதமன் வரவேற்றார். துணை அமைப்பாளர் முகமது கலிபா நன்றி கூறினார்.

Tags : Amitsha ,UN ,country ,
× RELATED மக்களவைத் தேர்தலில் போட்டியிடும்...