கலெக்டர் தகவல் வாகன ஓட்டிகள் அவதி

பொன்னமராவதி, ஜன. 28: பொன்னமராவதி பகுதியில் விபத்துகளை தடுக்கும் வகையில் போக்குவரத்து காவல்துறை சார்பில் வேகத்தடைகளுக்கு வெள்ளை வர்ணம் பூசும் பணி நடந்தது. அதன்படி தாலுகா அலுவலகம் அருகில் உள்ள 2 வேத்தடைகளுக்கு வௌ்ளை வர்ணம் பூசி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதைதொடர்ந்து நெஞ்சாலைத்துறையினர் வேகத்தடைகளுக்கு வெள்ளை வர்ணம் பூசினர். கறம்பக்குடி, ஜன. 28: கந்தர்வக்கோட்டை அருகே மஞ்ஜபேட்டை கிராமத்தை சேர்ந்த விவசாயி ராமசாமி மகன் ஞானபிரகாஷ் (25). இவர் கடந்த 14ம் தேதி கந்தர்வக்கோட்டை அருகே உள்ள ஆணைவிலுந்தான்கேணி கிராமத்தில் உள்ள தனது தங்கையின் வீட்டுக்கு சென்று விட்டு இருசக்கர வாகனத்தில் வந்தார். தெத்துவாசல்பட்டி மஞ்சபேட்டை அருகே வந்தபோது நிலைதடுமாறி பைக், சாலையோர மரத்தில் மோதியது. இதில் படுகாயமடைந்த ஞானபிரகாஷை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஞானபிரகாஷ் இறந்தார். இதுகுறித்து ராமசாமி கொடுத்த புகாரின்பேரில் கந்தர்வக்கோட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

More
>