×

போலீசார் தடுத்து நிறுத்தம் உலகத்தரமான அதிநவீன 128-சிலைஸ் சி.டி.ஸ்கேன் திருச்சி தென்னூர் காவேரி மருத்துவமனையில் அறிமுகம்

திருச்சி, ஜன.28: திருச்சியிலேயே முதன் முறையாக காவேரி மருத்துவமனையில் புதிய, அதிநவீன உலகத்தரமான 128-சிலைஸ் எனப்படும் மேம்படுத்தப்பட்ட சி.டி.ஸ்கேன் அறிமுகம் செய்யப்பட்டது. திருச்சியின் ஆயுத தயாரிப்பு நிறுவனத்தின் பொதுமேலாளர் ஹரிஷ்கரே மற்றும் ஜிஇ நிறுவனத்தின் இந்திய மற்றும் தெற்கு ஆசியாவின் தலைவரும், விப்ரோ ஜி.இ.ஹெல்த்கேர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனருமாகிய ஷ்ரவன் சுப்ரமணியம் ஆகியோர் இணைந்து காவேரி மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் டாக்டர் மணிவண்ணன் முன்னிலையில் துவங்கிவைத்தனர். அன்புச்செழியன், பெசிலிட்டி இயக்குனர், டாக்டர் செந்தில் வேல்முருகன், கதிரியக்கத்துறை தலைவர் மற்றும் மருத்துவ நிர்வாகி ஆகியோர் உடன் இருந்தனர். இந்த ஸ்கேன் இயந்திரமானது கீழ்கண்ட வசதிகளை கொண்டது.

இருதயம் மற்றும் புற்றுநோய்க்கான முப்பரிமாண மற்றும் நான்கு பரிமாண ஸ்கேன், குறைவான கதிர்வீச்சு தன்மை, ஓரிரு நிமிடங்களில் ஸ்கேன் எடுக்கக்கூடிய அதிவேக திறன், கரோனரி ஆஞ்சியோகிராபி, புற இரத்தநாள ஆஞ்சியோகிராபி, மூளை இரத்தநாள ஆஞ்சியோகிராபி, மூளையின் பகுப்பாய்வு ஸ்கேன் போன்ற சிறப்பம்சங்களை கொண்டுள்ளது. மேலும் காவேரி மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் டாக்டர் மணிவண்ணன் கூறுகையில், இந்த ஸ்கேன் இயந்திரம் துவங்கப்பட்டிருப்பது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. தொழில்நுட்பத்தின் முன்னேற்றங்கள் மருத்துவ சேவை வழங்குவதில் பெரும்பங்கு வகிக்கின்றன. தென்னூர் காவேரி மருத்துவமனையில் இந்த சி.டி.ஸ்கேன் இயந்திரம் நிறுவுவதன் மூலம் எங்கள் நோயாளிகளுக்கு துல்லியமாகவும், பாதுகாப்பாகவும் சிகிச்சை வழங்க முடியும் என தெரிவித்தார்.

Tags : Police detainee ,Trichy Tennur Kaveri Hospital ,
× RELATED உலகத்தரமான அதிநவீன 128-சிலைஸ்...