×

சூறாவளி காற்றால் வீடுகள் பாதிப்பு

மயிலாடுதுறை, ஜன. 28: மயிலாடுதுறை அருகே புத்தகரம், பாண்டூர் கிராமங்களில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் கடந்த மாதம் 11ம் தேதி வீசிய சூறாவளி காற்றால் ஏராளமான கூரை வீடுகள் சேதமடைந்தன. மேலும் மரங்கள் வேரோடு சாய்ந்ததில் பல்வேறு இடங்களில் வீடுகள் சேதமடைந்தன. இந்த சேதங்களை வருவாய்த்துறையினர் கணக்கெடுத்து சென்றபோதும் அதற்கான நிவாரணம் இதுவரை வழங்கவில்லை.
நிவாரணம் கேட்டு மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகம் ஆர்ப்பாட்டம் நடத்தியும், கலெக்டரிடம் மனு அளித்துமு் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த புத்தகரம், பாண்டூர் கிராம மக்கள் குடியரசு தினவிழாவை புறக்கணிப்பதாக அறிவித்து தங்கள் வீடுகளின் முன்பு கருப்புக்கொடி ஏற்றி எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தனர். இருப்பினும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காத கண்டித்து நேற்று மேலபாண்டூர் கிராமத்தில் விசிக முன்னாள் மாவட்ட செயலாளர் ஈழவளவன் தலைமையில் பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.

Tags : homes ,
× RELATED இல்லங்களில் இனிய வேல் பூஜை