×

மறைந்த பிரபலங்கள், அரசியல் தலைவர், உறுப்பினர்களுக்கு தமிழ்நாடு சட்டப்பேரவையில் இரங்கல்!!

சென்னை: தமிழக சட்டப்பேரவையின் இந்தாண்டுக்கான முதல் கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. இதில் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையை வாசிக்காமலேயே வெளியேறினார். ஆளுநரின் இந்த செயல் அவர் வகிக்கக்கூடிய பதவிக்கு அழகல்ல என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் ஆண்டின் தொடக்கத்தில் ஆளுநர் உரை என்ற நடைமுறையை விலக்கும் வகையில் முயற்சி எடுக்கப்படும் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடியாக அறிவித்தார். இதனை அடுத்து சபாநாயகர் அப்பாவு தமிழில் கவர்னர் உரையை படிக்க ஆரம்பித்தார். தொடர்ந்து 9.49 மணிக்கு அவர் உரையை படித்து முடித்தார். பின்னர் தேசியக்கீதம் இசைக்கப்பட்டு 10.50 மணிக்கு கூட்டம் முடிந்தது.

இதனை அடுத்து இன்று காலை சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது. இன்று சட்டப்பேரவையில் மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் பன்னீர்செல்வம் மற்றும் எல்.கணேசன், கவிஞர் ஈரோடு தமிழன்பன், திரைப்பட தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன் ஆகியோருக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது. இரங்கல் தீர்மானம் வாசித்தப் பின் சட்டப்பேரவை நிகழ்வுகள் இன்று ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும் நாளை காலை பேரவை கூடும்.

Tags : Tamil Nadu Legislature ,Chennai ,Governor ,R. N. Ravi ,Chief Minister ,K. Stalin ,
× RELATED டெல்லியில் மாறப்போகும் வானிலை: அடுத்த...