குளித்தலை உட்கோட்டத்தில் காவலர் பதக்கம் பெற்ற 11 பேருக்கு நினைவு பரிசு டிஎஸ்பி வழங்கினார்

குளித்தலை. ஜன. 28: தமிழ்நாடு முதலமைச்சர் காவலர் பதக்கம் நடப்பு ஆண்டில் காவல்துறையில் 10 ஆண்டுகள் சிறப்பாக பணிபுரிந்த காவல் ஆளிநர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சரின் காவலர் பதக்கம் வழங்கிட கரூர் மாவட்டத்தில் 39 காவல் ஆளிநர்களுக்கு பரிந்துரை செய்யப்பட்டதில் கரூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குடியரசு தினத்தன்று எஸ்பி பகலவன் மற்றும் கலெக்டர் மலர்விழி தலைமையில் பரிந்துரை செய்யப்பட்ட காவலர்களுக்கு பதக்கம் வழங்கப்பட்டது.அதில் குளித்தலை உட்கோட்டத்தில் 11 காவல் ஆளிநர்களுக்கு காவலர் பதக்கம் பெற்றதை பாராட்டும் விதமாக குளித்தலை டிஎஸ்பி சசிதர் தலைமையில் காவல் ஆளிநர்கள் மாப்பிள்ளைமைதீன், சந்திரஜித், வாசுதேவன், மீனாட்சி, ஜோதிலட்சுமி, ரேவதி, ராதிகா, வீரமணி, ஜெயா, கார்டில்யாஜுடி, லதா ஆகியோரை பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்து இனிப்புகளை வழங்கினார். முகாமில் கலந்து கொள்ள இயலாத கடுமையாக பாதிப்பட்ட மாற்றுத் திறனாளிகள் தங்களின் விபரங்களை வாட்ஸ்அப் எண்ணில் 8344341474 தெரிவித்திடலாம்.

Related Stories:

>