×

காட்டு யானைகள் குட்டிகளுடன் உலா

*பெரும்பாறை பகுதி விவசாயிகள் பீதி பட்டிவீரன்பட்டி : பெரும்பாறை பகுதியில் காட்டுயானைகள் குட்டிகளுடன் வலம் வருவதால் விவசாயிகள், பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் பெரும்பாறை அருகே தடியன்குடிசை, மருமலை, சேம்பிலிஊத்து, நடுப்பட்டி, பெரியூர், பள்ளத்து கால்வாய் உள்ளிட்ட மலைக்கிராமங்கள் உள்ளன. இங்குள்ள வனப்பகுதிகளில் காட்டுயானை, காட்டுமாடு, மான், மலைப்பன்றிகள், வரையாடுகள் உள்ளிட்ட விலங்குகள் வசிக்கின்றன. இவை அடிக்கடி உணவு, தண்ணீருக்காக அடிக்கடி குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைகின்றன. இவைகள் மலைத்தோட்டங்களில் பயிரிடப்பட்டுள்ள மலைவாழை, சவ்சவ், பீன்ஸ், மிளகு, ஆரஞ்சு, எலுமிச்சை, அவரை உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்திவிட்டு செல்வது தொடர்கதையாக உள்ளது.கடந்த 3 நாட்களாக 5 காட்டுயானைகள் தனது 3 குட்டிகளுடன் கொக்குப்பாறை, கவுண்டன்கானல் பகுதியில் முகாமிட்டுள்ளன. இதனால் இவ்வழியாக மலைத்தோட்டங்களுக்கு செல்லும் விவசாயிகள், கூலித்தொழிலாளர்கள் அச்சத்தில் உள்ளனர். காட்டுயானைகள் குடியிருப்பு பகுதியை நெருங்குவதால் ஊரில் வசிப்பவர்களும் பீதியடைந்து உள்ளனர்.விவசாயிகள் கூறுகையில், ‘‘வெடி வெடிப்பது, புகை போடுவதால் நிரந்தரமாக காட்டுயானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட முடியாது. தற்போது முகாமிட்டுள்ள யானைகள் மலைப்பகுதி வழியாக இறங்கி நிலப்பகுதிகளுக்கு வந்தால் மா, தென்னை பயிர்கள் சேதமடைந்து விவசாயிகளின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. எனவே வனத்துறையினர் காட்டுயானைகள் வருவதை தடுக்கும் வகையில் வனப்பகுதிகளுக்குள் உணவு, தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர். …

The post காட்டு யானைகள் குட்டிகளுடன் உலா appeared first on Dinakaran.

Tags : Perumparai ,Pattiveeranpatti ,
× RELATED பெரும்பாறை மலைப்பகுதியில்...