மயான பாதையை சீரமைத்த ஊர்மக்கள்

தர்மபுரி, ஜன.28: தர்மபுரி அருகே ஊர் மக்களே ஒன்றிணைந்து மயான பாதையை சீரமைத்தனர். தர்மபுரி அருகே பாகல்அள்ளி கிராமத்தில் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்திற்கு பாத்தியப்பட்ட மயானத்திற்கு செல்லும் பாதையானது பல வருடங்களாக சீரமைக்கப்படாமல் இருந்து வந்தது. இதுகுறித்து புகார் தெரிவித்தும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் கிராம இளைஞர்களே ஒன்று சேர்ந்து மயான பாதையை சீரமைக்க முடிவு செய்தனர்.

அதன்படி, ஊர் எல்லையில் இருந்து மயானத்திற்கு செல்லும் பாதையை சுமார் ஒரு கி.மீ., தொலைவிற்கு டிராக்டர், பொக்லைன் கொண்டு விநாயகம், அஜித், சிரஞ்சீவி, திராவிடமணி மற்றும் ஊர் பொதுமக்கள் சீரமைத்தனர். அவர்களுக்கு ஊராட்சி மன்றத் தலைவர் முருகன், துணைத் தலைவர் ரம்யா, செயலர் செல்வம் மற்றும் டாக்டர் பாலாஜி உள்ளிட்டோர் பாராட்டு தெரிவித்தனர்.

Related Stories:

>