பெருமாள் கோயில் கும்பாபிஷேக விழா

பாப்பாரப்பட்டி, ஜன.28: பாப்பாரப்பட்டி அடுத்த தாளப்பள்ளம், குள்ளனூர் பெருமாள் சுவாமி கோயிலில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதையொட்டி கணபதி பூஜை, வழிபாடு, 108 மூலிகை யாகம் நடைபெற்றது. மதியம் தீர்த்தக்குடம், முளைப்பாரி ஊர்வலம், மாலை 6 மணிக்கு முதல் கால யாக பூஜை, இரவு 10 மணிக்கு கோபுர கலசங்கள் வைத்து விநாயகர் பூஜை, அஷ்டபந்தனம் நடந்தது. நேற்று காலை 2ம் கால யாக பூஜை, மகா தீபாராதனை மற்றும் ஸ்ரீதேவி, பூதேவி சமேத பெருமாள்  மற்றும் கோபுர கலசத்திற்கு புனித நீரால், மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Related Stories:

>