×

பழுதடைந்த குழாயை மாற்றி குடிநீர் விநியோகத்தை சீர் செய்ய கோரி மனு

 

ஊட்டி, ஜன.20: ஊட்டி அருகே பாலகொலா, மகாலிங்க நகர் பகுதி மக்கள் பழுதடைந்த குடிநீர் குழாயை மாற்றி தர கோரி மனு அளித்தனர்.
இது தொடர்பாக மகாலிங்க நகர் பகுதி மக்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
நாங்கள் சுமார் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாலகொலா ஊராட்சி 1வது வார்டு மகாலிங்க நகர் பகுதியில் வசித்து வருகிேறாம். எங்கள் பகுதிக்கு கடந்த ஒரு வருடகாலமாக குடிநீர் சரிவர கிடைப்பதில்லை. கிணற்றில் இருந்து குடிநீர் தேக்க தொட்டி வரையுள்ள குழாய் மிகவும் பழுதடைந்துள்ளதால் துரு மற்றும் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் தேக்க தொட்டிக்கு தண்ணீர் வருவதில்லை. இதனை சரி செய்து தருமாறு பலமுறை வலியுறுத்தியும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.
இதனால் போதிய தண்ணீர் கிடைக்காமல் கடும் அவதிக்குள்ளாகி வருகிறோம். எனவே குடிநீர் குழாயை மாற்ற நடவடிக்கை எடுத்து குடிநீர் விநியோகத்தை சீர் செய்ய வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியுள்ளனர்.

Tags : Ooty ,Mahalinga Nagar ,Balagola ,
× RELATED வாய்க்காலில் டைவ் அடித்த தொழிலாளி பலி