திருக்கோஷ்டியூர் பெருமாள் கோயிலில் பெருமாள்,கோதை நாச்சியார் திருக்கல்யாண உற்சவ விழா

திருப்புத்தூர், ஜன.28:  திருப்புத்தூர் அருகே திருக்கோஷ்டியூர் சௌமிய நாராயணப்பெருமாள் கோயிலில் பெருமாள் கோதை நாச்சியார், தைலக்காப்பு, திருக்கல்யாண உற்சவம் துவங்கியது. திருப்புத்தூர் அருகே திருக்கோஷ்டியூர் சௌமிய நாராயணப்பெருமாள் கோயிலில் கோதை நாச்சியார் தைலக்காப்பு, திருக்கல்யாண உற்சவத்தையொட்டி நேற்று முன்தினம் ஆண்டாள் பெரிய சன்னதி எழுந்தருளலும், இரவு பெரிய பெருமாளிடம் பிரியாவிடை திருப்பாவை வியாக்யானம் நடைபெற்றது.

2ம் நாளான நேற்று காலை ஆண்டாள் தைலக்காப்பு மண்டபம் எழுந்தருளலும், தைலம் திருவீதி சுற்றுதலும் நடைபெற்றது. தொடர்ந்து தைலம் சாத்துதல், ஆண்டாளுக்கு நவகலஸ அலங்கார சவுரித் திருமஞ்சனம் நடைபெற்றது. இரவு திருவீதி புறப்பாடு நடந்தது. 3ம் நாளான இன்று காலை ஆண்டாள் தைலக்காப்பு மண்டபம் எழுந்தருளலும், தைலம் திருவீதி சுற்றுதலும் நடைபெறும். தொடர்ந்து தைலம் சாத்துதல், தொடர்ச்சியாக ஆண்டாளுக்கு நவகலஸ அலங்கார சவுரித் திருமஞ்சனம் நடைபெறும்.

இன்று மாலை ஆண்டாள் உச்சிக்கொண்டை சேவையும், மணவாள மாமுனிகள் கை தலத்தில் எழுந்தருளி கோதை நாச்சியாரை கடாஷித்தலும் நடைபெறும். 4ம் நாளான நாளை மாலை 5.30 மணியளவில் ஆண்டாள் தைலக்காப்பு மண்டபம் எழுந்தருளலும், தொடர்ந்து ஆண்டாள் முத்துக்குறி பார்த்தல் நடைபெறும். ஜன.30ம் தேதி காலை 10.15 மணியளவில் பெருமாள் திருக்கல்யாண மண்டபம் எழுந்தருளல், பெரியாழ்வார் எதிர்கொண்டு அழைத்தல் நடைபெறும். மாலை 4.30 மணியளவில் ஆண்டாள் அங்குமணித் திருவீதிப்புறப்பாடு (திருக்கல்யாண சீர்வரிசை மங்கள பொருட்களுடன் திருவீதி உலா) நடைபெறும். தொடர்ந்து ஊஞ்சல் மாலை மாற்றுதல் நடைபெறும்.

மாலை பெருமாள் ஆண்டாள் நாச்சியார் சேர்த்தியாய் திருக்கல்யாண மண்டபம் எழுந்தருளல் நடைபெறும். இரவு 7.16 மணிக்கு மேல் 7.58 மணிக்குள் திருக்கல்யாண மஹோத்ஸவம், திருமாங்கல்யாண தாரண வைபவம் நடைபெறும். இரவு பெருமாள், ஆண்டாள் நாச்சியார் திருவீதி புறப்பாடு நடைபெறும். தொடர்ந்து ஆஸ்தானம் எழுந்தருளல் நடைபெறும்.

Related Stories:

>