புதூரில் சாமி சிலைகள் மாயம்

சிங்கம்புணரி, ஜன.28:  சிங்கம்புணரி அருகே எஸ்.புதூர் ஒன்றியம் புதுர் கீழப்பநாயகர் ஊரணியில் பழமையான சிவசக்தி விநாயகர் கோயில் உள்ளது. அரசமரத்தடியில் உள்ள இக்கோயிலில் விநாயகர் சிலை நாகர் சிலைகள் வைக்கப்பட்டு வழிபாடு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மர்ம நபர்கள் விநாயகர், நாகர் சிலைகளை திருடி சென்று விட்டனர். இதுகுறித்து உலகம்பட்டி போலீசில் கிராம மக்கள் சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீசார் சிலையை மீட்டுத்தரக் கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

>