×

மகர சங்கராந்தி மலாய் ஏழு கறி கூட்டு

தேவையான பொருட்கள்

பூசணி, பரங்கிக்காய், சேனைக்கிழங்கு, கத்தரிக்காய், முருங்கைக்காய், அவரைக்காய் போன்ற பலவகையான காய்கறிகள் – ஒரு கிண்ணம்
பருப்பு – 150 கிராம்
சீரகப் பொடி – 1 டீஸ்பூன்
தயிர் – 2 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/2
தக்காளி – 4
பிரெஷ் கிரீம் – 2 டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை, கொத்தமல்லி – ஒரு கொத்து
கடுகு – 1/4 டீஸ்பூன்
பெருங்காயம் – ஒரு சிட்டிகை
சின்ன வெங்காயம் – 10
எண்ணெய் – தாளிக்க
உப்பு – தேவையான அளவு.

செய்முறை

பூசணி, பரங்கிக்காய், சேனைக்கிழங்கு, கத்தரிக்காய், முருங்கைக்காய், அவரைக்காய் போன்ற பலவகையான காய்கறிகளை நறுக்கிக் கொள்ளவும். பருப்பை வேகவைத்து மசித்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் நறுக்கிய காய்கறிகளைச் சேர்த்து பாலில் வேகவைத்து, அதனுடன் வேகவைத்த பருப்பு, மிளகாய் விழுது, சீரகப் பொடி, தயிர், மஞ்சள் தூள், தக்காளி, பிரெஷ் கிரீம் சேர்த்து கொதிக்க விடவும். வெந்ததும் பிறகு கடுகு, பெருங்காயம், கொத்தமல்லி, கறிவேப்பிலை, சின்ன வெங்காயம் சேர்த்து தாளித்து கூட்டுடன் சேர்க்கவும். சுவையான மகர சங்கராந்தி மலாய் ஏழு கறி கூட்டு தயார்.

Tags : Makar ,
× RELATED வாழை இலை கோவா பொங்கல்