×

பள்ளி மாணவி மாயம்

மதுரை செல்லூர் பூந்தமல்லி நகரை சேர்ந்தவர் துரைராஜ். இவர் தற்போது திருப்பூர், மடத்துக்குளத்தில் குடும்பத்துடன் தங்கி ஸ்பின்னிங் மில்லில் வேலை பார்த்து வந்தார். பிளஸ் 2 படித்து வந்த இவரது மகளுக்கும், ஒரு மாணவருக்கும் காதல் ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் துரைராஜ் தனது மகளை செல்லூரில் உள்ள மாமியார் வீட்டிற்கு அனுப்பி வைத்தார். இங்கிருந்த மாணவி கடந்த 25ம் தேதி வெளியில் சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. தாய் ரேவதி புகாரில் செல்லூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

Tags :
× RELATED 36 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கிறது மத்...