×

பாதயாத்திரை பக்தர்களுக்கு மாநகராட்சி அன்னதானம்

திண்டுக்கல், ஜன.28: பழநி தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பல்வேறு மாவட்டத்தில் இருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக கோயிலுக்கு நேர்த்திக் கடன் செலுத்த செல்கின்றனர். திண்டுக்கல், மதுரை புதுக்கோட்டை, காரைக்குடி, சிவகங்கை, விருதுநகர் மற்றும் பல்வேறு ஊர்களில் இருந்து பாதயாத்திரையாக ஆயிரக்கணக்கான பக்தர்கள் செல்கின்றனர். அவர்களுக்கு திண்டுக்கல் குடகனாறு பங்களாவில் வைத்து மாநகராட்சி சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. இதனை மாநகராட்சி ஆணையர் பாலசுப்பிரமணியம்,  மாநகராட்சி நல அலுவலர் லட்சியவர்ணன் துவக்கி வைத்தனர். நிகழ்வில் மாநகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

Tags : devotees ,
× RELATED சதுரகிரியில் அமாவாசை வழிபாடு: ஏராளமான பக்தர்கள் தரிசனம்