ரயில்வே சுரங்கப்பாதையில் தேங்கி நிற்கும் மழைநீர் வாகன ஓட்டிகள் அவதி

திண்டுக்கல், ஜன.28: திண்டுக்கல் ஆர்எம் காலனியில் உள்ள ரயில்வே சுரங்கப் பாதையில் மழை நீர் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைகின்றனர்.திண்டுக்கல் ஆர்எம்.காலனி மற்றும் அறிவுத்திருக்கோயில் பகுதிக்கு செல்லும் ரோட்டில் ரயில்வே சுரங்கப் பாதை அமைந்துள்ளது. இந்த வழியாக ஆயிரக்கணக்கான வாகனங்கள் தினமும் செல்கின்றன. இந்த வழியாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு திண்டுக்கல் பகுதியிலிருந்து செல்வோர் குறுக்குப் வழியாகவும் பயன்படுத்துகின்றனர். தினமும் ஏராளமான மக்கள் இந்த வழியாக செல்கின்றனர்

இந்த பகுதியில் மழை பெய்தால் பயன்படுத்த முடியாத நிலைக்கு மாறி விடுகிறது. திண்டுக்கல் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த தொடர் மழையினால், ரயில்வே சுரங்கப் பாதையில் தண்ணீர் தேங்கியுள்ளது. வாகனங்களின் சக்கரத்தின் பாதியை மூழ்கடிக்கும் அளவுக்கு தண்ணீர் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைகின்றனர். அதேபோல் ஆட்டோ மற்றும் கார்களில் பயணிப்போரும் அந்த பகுதியை கடந்து செல்லும் போது சிரமம் அடைகின்றனர். இதற்கு ரயில்வே நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.

Related Stories:

>