×

குஜிலியம்பாறையில் திமுக செயற்குழு கூட்டம்

குஜிலியம்பாறை, ஜன.28: குஜிலியம்பாறையில் ஒன்றிய மற்றும் பேரூர் திமுக சார்பில் செயற்குழு கூட்டம் நேற்று நடந்தது. திமுக ஒன்றிய செயலாளர் சீனிவாசன் தலைமை வகித்தார். பேரூர் செயலாளர் சம்பத், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சக்திவேல் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், குஜிலியம்பாறை ஒன்றிய பகுதியில் வீடு தோறும் மக்களை சந்தித்து மக்கள் விரோத அதிமுக அரசின் அவலங்களை எடுத்துரைத்து, அதிமுக அரசை விரட்டியடிக்க தேர்தல் பணியாற்ற வேண்டும். திண்டுக்கல் மாவட்டத்திற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்திற்கு வருகை தரும் போது குஜிலியம்பாறை ஒன்றிய மற்றும் பேரூர் திமுகவினர் திரளாக பங்கேற்பது மற்றும் தற்போது வழங்கப்பட்டுள்ள புதிய வாக்காளர் பட்டியலில் திமுக வாக்காளர்களின் பெயர்கள் சரியாக உள்ளனவா என்பதை சரிபார்த்திட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் நிர்வாகிகள் மாரிமுத்து, பொன்சுப்பிரமணி, சவுந்தர்மாரியப்பன், மணிமாறன், தாமரைக்கண்ணன், கலைச்செல்வன், ராஜ்குமார், கருப்பையா, இளங்கோவன், செல்வநாராயணன், செல்வராஜ், பாலசுப்பிரமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : meeting ,DMK Executive Committee ,Kujiliampara ,
× RELATED காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் 95-வது...