×

குப்பைக் கிடங்கை இடமாற்றம் செய்யக்கோரி மண்டல அலுவலகம் முன்பு கண்டனஆர்ப்பாட்டம்

திருப்பூர், ஜன.28: திருப்பூரில் குப்பைக் கிடங்கை இடமாற்றம் செய்யக்கோரி குமரானந்தபுரம் பகுதி மக்கள் 1வது மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டு நேற்று கண்டனஆர்ப்பாட்டம் நடத்தினர். திருப்பூர் மாநகராட்சி குமரானந்தபுரம் 9வது வார்டைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் அனுப்பர்பாளையத்தில் உள்ள 1-வது மண்டல அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டனர். அப்போது அவர்கள் கூறியதாவது: எங்களது பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகிறோம். இப்பகுதியில், சாந்தி தியேட்டர் பஸ் நிறுத்தமும் உள்ளது. இந்த வழியாக தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் சென்று வருகின்றனர்.

இந்நிலையில், சாந்தி தியேட்டர் எதிர்புறம் உள்ள சுடுகாட்டில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின்கீழ் குப்பையில் இருந்து உரம் தயாரிக்கும் கிடக்கு 3 மாதமாக செயல்பட்டு வருகிறது.இதனால் எங்கள் பகுதியில் ஈ மற்றும் கொசு தொல்லைகள் அதிகரித்துள்ளது. இதன்காரணமாக, சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருவதுடன், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் சுவாசக்கோளாறு உள்ளிட்ட பல்வேறு உபாதைகளும் ஏற்பட்டு வருகிறது. ஆகவே, இதைக்கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோம். குப்பைக் கிடங்கை வேறு பகுதிக்கு இடமாற்றம் செய்ய வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர். இதே கோரிக்கையை வலியுறுத்தி மண்டல அலுவலகத்திலும் மனு அளித்தனர்.

Tags : office ,landfill ,relocation ,
× RELATED பெரம்பலூர் மாவட்ட எல்லைக்குள் சிறுத்தை: தவறான தகவல்