×

சுகாதாரம் இல்லாத கடைகளுக்கு அபராதம்

ஊட்டி,ஜன.28: ஊட்டியில் சுகாதாரம் இல்லாத கடைகள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் வைத்திருந்த கடைகளுக்கு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அபராதம் விதித்தனர். ஊடடியில் உள்ள மார்க்கெட் மற்றும் நகரில் உள்ள கடைகளில் சுகாதாரம் இல்லாமல் சில கடைகள் செயல்பட்டு வருவதாக மாவட்ட நிர்வாகத்திற்கு புகா்ர சென்றுள்ளது. இதனை தொடர்ந்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, மார்க்கெட் பகுதியில் சுகாதாரம் இன்றி செயல்பட்ட இரு கடைகள் கண்டறியப்பட்ட அந்த கடைகளுக்கு ரூ.4 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

மேலும், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்படுத்தி நான்கு கடைகளுக்கு தலா ஆயிரம் வீதம் ரூ.4 ஆயிம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், கெட்டுப்போன இறைச்சி வைத்திருந்ததாக ஒரு இறைச்சி கடையில் 2 கிலோ இறைச்சி பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது. மேலும், முககவசம் இன்றி சுற்றித்திரிந்த 9 பேர்களுக்கு தலா ரூ.150 அபராதம் விதிக்கப்பட்டது. சுகாதார ஆய்வாளர் சிவராஜ் தலைமையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

Tags : shops ,
× RELATED ஒரத்தநாடு கடை தெருவில் 5 கடைகளில் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி