×

கே.ஜி. மருத்துவமனையில் விபத்து-அவசர சிகிச்சை நவீன பிரிவு துவக்கம்

கோவை, ஜன. 28: கோவை கே.ஜி. மருத்துவமனை வளாகத்தில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை நவீன பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. மருத்துவமனை தலைவர் டாக்டர் பக்தவத்சலம் தலைமை தாங்கினார். கே.ஜி.-ஐ.எஸ்.எல். தலைவர் அசோக் பக்தவத்சலம், கே.ஜி. மருத்துவமனை முதன்மை நிர்வாகிகள் வசந்தி ரகு, அவந்திகா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோவையை சேர்ந்த சமூக சேவகரும், நல்லறம் அறக்கட்டளை தலைவருமான எஸ்.பி. அன்பரசன் இப்புதிய பிரிவை துவக்கிவைத்தார். இதுபற்றி டாக்டர் பக்தவத்சலம் கூறியதாவது: கே.ஜி மருத்துவமனை கடந்த 47 ஆண்டு காலமாக மருத்துவ சேவை செய்து வருகிறது. பல முன்னணி தலைவர்கள் இங்கு சிகிச்சை பெற்று சென்றுள்ளனர். பல லட்சம் பேர் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது. விபத்து அவசர சிகிச்சை பிரிவில், தற்போது நவீனத்துவம் படைத்த மற்றொரு பிரிவு துவக்கப்பட்டுள்ளது. இங்கு, 24 மணி நேரமும் டாக்டர்கள் இருப்பார்கள். விபத்து சிகிச்சை, தலைக்காயம், எலும்பு முறிவு, இருதய சிகிச்சை, மூளை மற்றும் நரம்பு சிகிச்சை, சிறுநீரக சிகிச்சை ஆகியவற்றுக்கு அதிநவீன சிகிச்சை அளிக்கப்படுகிறது. அதற்கான உபகரணங்கள் இங்கு உள்ளன.

அனுபவம் வாய்ந்த மருத்துவர்கள் செல்வகுமார், பேபி கவிதா, ஜெயஷகிலா, அமிர்தலிங்கம், மணிமொழி செல்வன், கார்த்திகேயன், அருண் தருமன், சேனா குரியன், கலைமணி, அவசர சிகிச்சை தொழில்நுட்ப வல்லுனர்கள் கிருஷ்ணகுமார், செந்தில்குமார் ஆகியோர் இங்கு பணியில் இருப்பார்கள். ‘கோல்டன் ஹவர்’ எனக்கூறப்படும், விபத்து நடந்த ஒரு மணி நேரத்துக்குள் இங்கு வந்துவிட்டால், நோயாளிகளை 99 சதவீதம் காப்பாற்ற முடியும். இவ்வாறு டாக்டர் பக்தவத்சலம் கூறினார்.


Tags : K.G. ,Launch ,hospital ,
× RELATED பழம்பெரும் மலையாள இசையமைப்பாளர் கே.ஜி.ஜெயன் இன்று காலமானார்