×

ஸ்பிக்நகர் அருகே மழை ஓய்ந்து 10 நாட்களாகியும் தண்ணீர் வற்றாததால் பொதுமக்கள் பாதிப்பு

ஸ்பிக்நகர், ஜன.28: ஸ்பிக்நகர் அருகே மழை ஓய்ந்து 10 நாட்களுக்கு மேலாகியும் தண்ணீர் வற்றாமல் தேங்கி கிடப்பதால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். தூத்துக்குடி மாநகராட்சி தெற்கு மண்டலத்திற்குட்பட்ட சாந்திநகர் அமைக்கப்பட்டுள்ள சாலை சுற்றுவட்டார பகுதிகளை காட்டிலும் பள்ளமாக காணப்படுகிறது. இதனால் சிறிது மழை பெய்தால் கூட சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து மழை நீர் சாந்திநகர் 2, 3வது தெருவை சூழ்ந்து கொள்கிறது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு தொடர்ந்து பெய்த மழையால் தண்ணீர் சாந்திநகர் பகுதியை சூழ்ந்துள்ளது. மழைநீரை வெளியேற்ற வழியில்லாமல் சாலையை தோண்டி  வெளியேற்றினார்கள். இருப்பினும் முழுமையாக தண்ணீர் வடியாததால் தெருக்களில் தேங்கி நின்ற மழைநீர் பாசிபடர்ந்து தூர்நாற்றம் வீசுகிறது. இதனால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. அந்த நீரில் சிறுகுழந்தைகளை வைத்து கொண்டு பொதுமக்கள் நடந்து சென்று வருகின்றனர். இனிவரும் காலங்களிலும் சாந்திநகர் பகுதி தெருக்களில் தண்ணீர் தேங்காமல் இருக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பள்ளமான சாலையை உயர்த்தி கொடுக்கவும், முறையான வாறுகால் வசதி அமைத்து கொடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Spiknagar ,public ,
× RELATED தூத்துக்குடியில் வீட்டில் பதுக்கி...