×

வேப்பலோடையில் வீரவணக்க நாள்

ஓட்டப்பிடாரம், ஜன 27: ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் வேப்பலோடையில் மொழிப்போர் தியாகி ஏசுதாசனின் முதலாம் ஆண்டு நினைவு நாளில் அவரது படத்திறப்பு விழா, கட்சி கொடியேற்று விழாவும் நடந்தது.
நிகழ்ச்சிக்கு கிழக்கு ஒன்றிய திமுக செயலாளரும் ஓட்டப்பிடாரம் யூனியன் துணைசேர்மனுமான காசிவிஸ்வநாதன், மொழிப்போர் தியாகியின் படத்தை திறந்து வைத்து கட்சிக் கொடியை ஏற்றி வைத்தார்.  இதில் வேப்பலோடை கிளை செயலாளர் ரூஸ்வெல்ட், ஒன்றிய கவுன்சிலர் ராஜ், மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் நடராஜன், ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் கல்மேடு தங்கசாமி, பிரதிநிதி முத்துராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags : Veeravanaka Day ,
× RELATED ஜன. 25 வீரவணக்க நாள் பொதுக்கூட்டம்; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை..!!