×

வடக்கு மாவட்ட அவசர செயற்குழு கூட்டம் வாக்காளர் பட்டியல் தவறுகளை திமுகவினர் தேர்தல் அலுவலருக்கு தெரிவிக்க வேண்டும் கீதாஜீவன் எம்எல்ஏ வேண்டுகோள்

தூத்துக்குடி, ஜன.27: வாக்காளர் பட்டியலிலுள்ள தவறுகளை திமுகவினர் சரிபார்த்து தேர்தல் அலுவலருக்கு தெரியப்படுத்திடவேண்டும் என்று மாவட்ட பொறுப்பாளர் கீதாஜீவன் எம்எல்ஏ அறிவுறுத்தியுள்ளார். தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக அவசர  செயற்குழு கூட்டம் தூத்துக்குடி கலைஞர் அரங்கில் மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ் தலைமையில் நடந்தது. மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெகன்பெரியசாமி, மாநகர செயலாளர் ஆனந்தசேகரன்  முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கீதாஜீவன் எம்எல்ஏ  பேசியதாவது,  புதிய வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதனை அந்தந்த பாக பொறுப்பாளார்கள் இரட்டை பதிவு, இறப்பு, இடமாற்றம் குறித்த விபரங்கள் அனைத்தையும் சரிபார்த்தும் சம்பந்தப்பட்ட தேர்தல் அலுவலருக்கும், கட்சியின் மாவட்ட அலுவலகத்திற்கும் தெரியப்படுத்திடவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். உறுப்பினர்கள் அனைவரும் அலட்சியம் காட்டாமல் செயல்படவேண்டும்.

வரும், 3ம்தேதி அண்ணா நினைவு தினத்தை வடக்கு மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் அவரது படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்திடவேண்டும். மேலும் தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி தூத்துக்குடி மாவட்டத்திற்கு தலைவர் பொதுமக்களை நேரில் சந்திக்க வருகை தர இருக்கிறார்கள். எனவே, அன்றைய தினம் தலைவருக்கு சிறப்பான வரவேற்பு அளித்திடவேண்டும் என்றார். கூட்டத்தில், மாநில விவசாய தொழிலாளரணி செயலாளர் சுப்பிரமணியன், மாவட்ட துணைச் செயலாளர்கள் ராஜ்மோகன் செல்வின், ஆறுமுகம், ஏஞ்சலா, மாவட்ட பொருளாளர் மோகன், சுசீ ரவீந்திரன், தலைமை செயற்குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன், பொதுக்குழு உறுப்பினர்கள் ராதாகிருஷ்ணன், அன்புராசன், ராசாகண்னு, ராஜா, கோவில்பட்டி நகர செயலாளர் கருணாநிதி, ஒன்றிய செயலாளர்கள் செல்வராஜ், மும்மூர்த்தி, சின்னப்பாண்டியன், கருப்பசாமி, முருகேசன், நவநீதகண்ணன், காசிவிஸ்வநாதன், பேரூர் செயலாளர்கள் வேலுச்சாமி, கிருஷ்ணக்குமார், ராகவன், சுரேஷ்கண்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Tags : Northern District Emergency Executive Committee Meeting Geethajeevan MLA ,Election Officer ,DMK ,
× RELATED சென்னையில் வாக்குப்பதிவு சதவீதம் குறைந்தது ஏன்?: புதிய தகவல்