×

கோவில்பட்டி கல்லூரியில் நாளை தனியார் வேலைவாய்ப்பு முகாம்

கோவில்பட்டி, ஜன. 28: கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில் நாளை தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது. அதற்கான முன்னேற்பாடு பணிகளை கலெக்டர் செந்தில்ராஜ் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் கூறும்போது, கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில் வேலைவாய்ப்பு துறையின் மூலம் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நாளை நடக்கிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் உள்ள தனியார் நிறுவனங்கள் முகாமில் பங்கேற்க உள்ளன. ெகாரோனா பரவலால் ஏராளமானோர் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர். தற்போது தனியார் நிறுவனங்களுக்கு அதிக ஆட்கள் தேவைப்படுகிறது. மேலும், ஏராளமானோர் வேலைவாய்ப்பு கேட்டு மக்கள் குறைதீர் கூட்டத்தில் மனு வழங்கினர். அதை கருத்தில்கொண்டு மாவட்ட நிர்வாகம் மற்றும் வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் நாளை (29ம்தேதி)  மெகா வேலைவாய்ப்பு முகாம் நடத்த உள்ளோம். முகாமில், 102 நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன. மேலும், சில நிறுவனங்களுடன் பங்கேற்க பேசி வருகிறோம். முகாமில் சுமார் 4 ஆயிரம் இளைஞர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கிறோம். 2 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்க திட்டமிட்டப்பட்டுள்ளது.

மேலும், வேலைவாய்ப்பு துறையின் மூலம், தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற WWW.tnprivatejobs.tn.gov.in  இணையதளம் உள்ளது. வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்க வருபவர்களின் விபரங்களும் அதில் பதிவு செய்யப்பட்டு, தொடர்ந்து அவர்களுக்கு வேலை கிடைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார். ஆய்வின்போது, கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரி தாளாளர் அருணாசலம், வேலைவாய்ப்புதுறை உதவி இயக்குநர் பேச்சியம்மாள், வேலைவாய்ப்பு அலுவலர் ரம்யா, கல்லூரி இயக்குநர் சண்முகவேல், முதல்வர் காளிதாஸ்முருகவேல், தாசில்தார் மணிகண்டன் உடனிருந்தனர்.

Tags : employment camp ,Kovilpatti College ,
× RELATED மாவட்ட கலெக்டர் ஆபீசில் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை வாய்ப்பு முகாம்