×

மாதக்கணக்காக தேங்கி நிற்கும் மழைநீர் தூத்துக்குடியில் பொதுமக்கள் போராட்டம்

தூத்துக்குடி, ஜன. 28: தூத்துக்குடி தனசேகரன்நகர், முத்தம்மாள் காலனி உள்ளிட்ட பகுதிகள் தற்போது ஓட்டப்பிடாரம் தொகுதியில் உள்ளன. இந்த பகுதிகளில் கடந்த சில மாதங்களாகவே மழை நீர் வீடுகளை சூழ்ந்துள்ளது. மாதக்கணக்கில் அகற்றப்படாத நிலையில் அடுத்தடுத்து பெய்த மழை காரணமாக அப்பகுதியில் சுமார் 1000க்கும் மேற்பட்ட வீடுகள் தீவு போல காட்சியளிக்கிறது.  பெரும் சுகாதார சீர்கேடு மற்றும் தொற்று நோய்களை ஏற்படுத்தி வரும் இந்த மழை நீரை அகற்றுவதற்காக அப்பகுதி பொதுமக்கள் பல போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். இதன் பின்னரும் மழை நீரை அகற்றும் பணி துவங்கிய வேகத்திலேயே முடிந்து போனது. இதனால் தங்களது பகுதிகளை தூத்துக்குடி மாநகராட்சியுடன் இணைக்க வேண்டும், வீடுகளுக்கும், வீடுகளில் இருந்து வெளியேயும் செல்ல இயலாத வகையில் தேங்கியுள்ள வெள்ள நீரை அகற்ற வேண்டும் என்றும் அப்பகுதி பொதுமக்கள் தேங்கிய மழை நீரில் நின்று பேராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக இந்த போராட்டம் நீடித்தது. இருப்பினும் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தவோ, நடவடிக்கை எடுக்கவோ அதிகாரிகள் நீண்ட நேரம் முன்வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : protest ,Thoothukudi ,
× RELATED தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று...