×

தொடர் மழையால் தேயிலை விவசாயம் பாதிப்பு

கூடலூர் :  கூடலூர் பந்தலூர் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான சிறு குறு தேயிலை விவசாயிகள் உள்ளனர். ஒரு ஏக்கர் முதல் ஐந்து ஏக்கர் வரை விவசாயம் செய்யும் சிறு குறு விவசாயிகளுக்கு தேயிலையால் கிடைக்கும் வருமானம் மட்டுமே வாழ்வாதாரமாக உள்ளது. இந்த நிலையில் இந்த வருடம் பருவமழை விட்டுவிட்டு சாரல் மழையாகவும் தொடர்ச்சியாக மேக மூட்டமும் காணப்பட்டதால் தேயிலை செடிகள் நோய் தாக்கி பாந்தேயிலை உற்பத்தி குறைந்து போய் உள்ளது.மேலும் பசுந்தேயிலையின் விலையும் குறைந்து உள்ளதால் விவசாயிகள் வருமான இழப்பை சந்தித்து வருகின்றனர். வழக்கமாக பருவமழை துவங்கும் மே மாதம் துவங்கி ஜூன் ஜூலை மாதம் வரை பசுந்தேயிலை உற்பத்தி அதிகமாக காணப்படும். ஆகஸ்ட் மாதத்தில் அடை மழை காரணமாக உற்பத்தியின அளவு குறைந்தாலும் செப்டம்பர் மாதத்தில் மீண்டும் உற்பத்தி அதிகரிக்கும்.ஆனால் இந்த வருடம் வழக்கத்திற்கு மாறாக சாரல் மழை மற்றும் பனி மூட்டம் காரணமாக வெயிலின் தாக்கம் குறைந்தது செடிகளில் கொப்புள நோய் தாக்கி பசுந்தழைகள் கருகி காணப்படுகின்றன. கொப்புள நோய் தாக்கிய பசுந்தேயிலை தரமான தேயிலை உற்பத்திக்கு ஏற்றதாக இல்லை என்பதால் தொழிற்சாலைகளை இவற்றை வாங்குவதை தவிர்த்து வருகின்றனர். மேலும் கடந்த வருடத்தைவிட பசுந் தேயிலையின் கொள்முதல் விலையும் சரி பாதியாக குறைந்துள்ளது. உற்பத்தியும் குறைந்து விலையும் குறைந்து உள்ளதால் விவசாயிகள் வருமான இழப்பை சந்தித்து வருகின்றனர்….

The post தொடர் மழையால் தேயிலை விவசாயம் பாதிப்பு appeared first on Dinakaran.

Tags : Cuddalore ,Cuddalore Bandalur ,
× RELATED கள்ளத்தொடர்பை கைவிடாததால் மனைவியை வெட்டி கொன்ற கணவன்