×

சுதந்திரப் போராட்ட வீரர் இமானுவேல் சேகரனார் திருவுருவச் சிலையுடன் கூடிய அரங்கத்தினை நாளை திறந்து வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

 

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சுதந்திரப் போராட்ட வீரர் தியாகி வே. இமானுவேல் சேகரனார் அவர்களின் திருவுருவச் சிலையுடன் கூடிய அரங்கத்தினை திறந்து வைத்து சிறப்பிக்கவுள்ளார்கள்.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், வருகின்ற அன்று நண்பகல் 12.00 மணியளவில் இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் ரூபாய் 3 கோடி மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சுதந்திரப் போராட்ட வீரர் தியாகி வே. இமானுவேல் சேகரனார் அவர்களின் திருவுருவச்சிலையுடன் அரங்கத்தினை திறந்து வைத்து சிறப்பிக்கவுள்ளார்கள்.

கூடிய சுதந்திரப் போராட்ட வீரர் தியாகி வே. இமானுவேல் சேகரனார் அவர்கள் இராமநாதபுரம் மாவட்டம், செல்லூர் கிராமத்தில் வேதநாயகம் ஞானசுந்தரி தம்பதியருக்கு மகனாக 09.10.1924 அன்று பிறந்தார். ஆரம்பக் கல்வியினை பரமக்குடியிலும், உயர்நிலைக் கல்வியை இராமநாதபுரத்திலும் பயின்றார். தமது இளம் வயதிலேயே இந்திய சுதந்திரத்துக்காக குரல் கொடுத்தார். ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்டு மூன்று மாதம் சிறைத் தண்டனை பெற்றார்.

1942ஆம் ஆண்டு நடைபெற்ற வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் கலந்து கொண்டு சிறை சென்றார். 1945ஆம் ஆண்டு இந்திய இராணுவத்தில் சேர்ந்து பணிபுரிந்தார். 1950ஆம் ஆண்டு ஒடுக்கப்பட்ட மக்களுக்காக “ஒடுக்கப்பட்டோர்களின் விடுதலை இயக்கம்” என்ற அமைப்பைத் தொடங்கினார்.
1954ஆம் ஆண்டு இரட்டை குவளை முறைக்கு எதிராகவும், தீண்டாமைக்கு எதிராகவும் போராடினார். ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடிய சுதந்திரப் போராட்ட வீரர் தியாகி வே.இமானுவேல் சேகரனார் அவர்கள் 11.09.1957 அன்று மறைந்தார்.

1962ஆம் ஆண்டு சட்டமன்ற மேலவை உறுப்பினர் ஆனார். 1967, 1971 ஆம் ஆண்டுகளில் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1977ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். 1977 முதல் 1987 ஆம் ஆண்டு வரை தொடர்ந்து 10 ஆண்டுகள் தமிழ்நாட்டின் முதலமைச்சராகத் திகழ்ந்து பல்வேறு நலத்திட்டங்களை மக்களுக்கு வழங்கினார்.

முதலமைச்சர் பொறுப்பில் இருந்தபோதே உடல்நலம் குன்றி, டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்கள் 24-12-1987 அன்று மறைந்தார். எம்.ஜி.ஆர். அவர்களின் அளப்பரிய மக்கள் சேவையினைப் பாராட்டி, 1988 ஆம் ஆண்டு இந்திய அரசின் மிக உயரிய விருதான ‘பாரத ரத்னா’ விருது வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது.

மேலும், எம்.ஜி.ஆர். அவர்களைப் பெருமைப்படுத்துகின்ற வகையில், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் 17.1.1990 ஆம் ஆண்டு சிறப்பு அஞ்சல் தலை வெளியிட்டார். முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் சென்னை கிண்டியில் உருவாக்கப்பட்ட மருத்துவப் பல்கலைக்கழகத்திற்கு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் என்று பெயர் சூட்டியதோடு. அப்பல்கலைக்கழக முகப்பில் அவரது திருவுருவச் சிலையினை நிறுவி 31.7.1998 அன்று திறந்து வைத்துப் பெருமை சேர்த்தார்.

சத்துணவுத் திட்டத்தின் மூலம் அழியாப் புகழ்பெற்றுள்ள டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்களின் பிறந்த நாளான ஜனவரி 17 ஆம் நாள். ஆண்டுதோறும் தமிழ்நாடு அரசின் சார்பில் அரசு விழாவாகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிகழ்ச்சியில் மேயர், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், துணை மேயர், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு உயர் அலுவலர்கள் முதலானோர் பங்கேற்றுச் சிறப்பிக்கிறார்கள்.

Tags : Emanuel Sekaranar Thiruvruva ,K. Stalin ,Chennai ,Chief Minister ,Mu. ,Ramanathapuram district Paramakudi ,Emanuel Sekaran ,Thiruvuru ,Tamil Nadu ,
× RELATED மதுரை மாவட்டம் பாலமேடு ஜல்லிக்கட்டு...