மதுரை: மதுரை மாவட்டம் பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 3 சுற்று முடிவில் 295 காளைகள் களம் கண்டது. உலக புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. கோயில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டது. போட்டியில் சுமார் 1,000 காளைகள் களமிறக்கப்பட உள்ளன. 500க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் களத்தில் உள்ளனர்.
மதுரை மாவட்டம் பாலமேடு ஜல்லிக்கட்டின் முதல் சுற்று முடிவடைந்தது. 110 காளைகள் களம் கண்டது. 20 மாடுகள் பிடிபட்டது. இறுதிச்சுற்றுக்கு தேர்வான 2 வீரர்கள் தேர்வாகியுள்ளனர். சின்னப்பட்டியை சேர்ந்த தமிழரசு 6 காளைகளையும், மஞ்சம்பட்ட துளசிராம் 4 காளைகளை பிடித்துள்ளனர்.
காளைகள் களம் கண்டது. 23 மாடுகள் பிடிபட்டது. இறுதிச்சுற்றுக்கு 2 வீரர்கள் தேர்வாகியுள்ளனர். பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் 2 மாடுபிடி வீரர்கள், பார்வையாளர் ஒருவர் என 3 பேர் காயம் அடைந்துள்ளனர். சின்னப்பட்டியை சேர்ந்த தமிழரசு 6 காளைகளையும், மஞ்சம்பட்ட துளசிராம் 4 காளைகளை பிடித்துள்ளனர்.
மதுரை மாவட்டம் பாலமேடு ஜல்லிக்கட்டின் 3வது சுற்று விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மதுரை மாவட்டம் பாலமேடு ஜல்லிக்கட்டின் 12 மணி நிலவரப்படி பரிசோதனைக்கு 239 காளைகள் வந்துள்ளது. ஜல்லிக்கட்டிற்கு 238 காளைகள் அனுமதிக்கப்பட்டது. 01 காளை தகுதி நீக்கம் செய்யப்பட்டது.
மதுரை மாவட்டம் பாலமேடு ஜல்லிக்கட்டின் மூன்றாம் சுற்று முடிவடைந்தது. 110 காளைகள் களம் கண்டது. 20 மாடுகள் பிடிபட்டது. 3வது சுற்றில் 11 காளைகளை பிடித்துள்ளார் பொதும்பு பிரபாகரன், சின்னப்பட்டியை சேர்ந்த தமிழரசு 6 காளைகளையும், மஞ்சம்பட்டியை சேர்ந்த துளசிராம் 4 காளைகளை பிடித்துள்ளனர். 3வது சுற்றில் களம் கண்ட காளைகள் 295; பிடிபட்ட மாடுகள் 25; இறுதிச்சுற்றுக்கு 104 வீரர்கள் தேர்வாகியுள்ளனர்.
